search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளியம்மன் கோவில்"

    • காளியம்மன் கோவில் வேப்பமரத்தில் இருந்து முதலில் மரத்தின் ஒரு பகுதியில் மட்டும் பால் வடிந்தது.
    • தமிழகத்தில் கோவிலில் அவ்வப்போது நிகழும் இந்த அதிசயம் தற்போது தஞ்சையிலும் நிகழ்ந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தை சி.ஆர்.சி டெப்போ அருகில் எம்ஜிஆர் நகர் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோயிலில் முனீஸ்வரர், நாகம்மன் சன்னதிகளும் பரிவார தெய்வங்களாக உள்ளன. தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். இங்கு சுமார் 40 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் உள்ளது.

    இந்நிலையில் இந்த வேப்பமரத்தில் இருந்து திடீரென வெள்ளை நிறத்தில் பால் வடிந்தது. தொடர்ந்து இடைவிடாமல் பால் வடிந்து வருகிறது.

    தகவல் அறிந்த பக்தர்கள் ஏராளமானோர் கோவிலில் திரண்டு வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயத்தை கண்டு வியந்து தரிசனம் செய்து வருகின்றனர். பலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்து வருகின்றனர்.

    இது பற்றி பக்தர்கள் கூறும்போது, காளியம்மன் கோவில் வேப்பமரத்தில் இருந்து முதலில் மரத்தின் ஒரு பகுதியில் மட்டும் பால் வடிந்தது. தற்போது 3 இடங்களில் வடிந்து ஓடி கொண்டிருக்கிறது என்றனர்.

    தமிழகத்தில் கோவிலில் அவ்வப்போது நிகழும் இந்த அதிசயம் தற்போது தஞ்சையிலும் நிகழ்ந்துள்ளது. 

    • மடப்பரம் காளியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் போது உதவி ஆணையர் தங்க கொலுசு திருடினார்.
    • அதன்பேரில் திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மானாமதுரை

    தமிழக அரசின் அறநிலை யத்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிர சித்தி பெற்ற மடப்புரம் காளி கோவிலில் கடந்த புதன்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அப்போது கோவில் அறநி லையத்துறை உதவி ஆணை யர் வில்வமூர்த்தி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த தலா நான்கு சவரன் எடையுள்ள இரு தங்க கொலுசுகளை மறைத்து வைப்பது தெரிந்தது.

    இதுகுறித்து அங்கிருந்து அலுவலர்கள் கேட்டபோது நான்கு சவரன் எடையுள்ள ஒரு கொலுசை மட்டும் வில்வமூர்த்தி திரும்ப ஒப்ப டைத்துள்ளார். மற்றொரு கொலுசை கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படு கிறது. உண்டியல் எண்ணும் இடத்தில் இருந்த கண்கா ணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது வில்வ மூர்த்தி தங்க கொலுசுகளை மறைத்து வைத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து மடப்புரம் கோவில் அறநிலையத்துறை அலுவலர்கள் சிவகங்கை இணை ஆணையருக்கு இச் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மானாமதுரை அறநிலையத்துறை ஆய்வாளர் அய்யனார் நேற்று இரவு திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வில்வமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது.
    • காளியம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.

    மயிலாடுதுறை:

    குத்தாலம் அருகே வழுவூர் கிராமத்தில் தில்லை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு கோவில் திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

    தற்போது கோவிலின் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் குடமுழுக்கு விழா விக்னேஸ்வர பூஜை, கோவிலின் பரிகார பூஜைகளுடன் கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

    தொடர்ந்து பூர்ணாகுதிக்கு பிறகு மேளதாளம் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டன.

    பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவிலில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.

    தொடர்ந்து கர்ப்ப கிரகத்தில் அமைந்துள்ள தில்லை காளியம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை வழுவூர் கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • காளியம்மன் உள்பட பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
    • அம்மனுக்கு பட்டு ஆடைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தட்டாங்குளம் காளியம்மன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் வருசாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை கோவில் முன்பு யாக சாலைகள் அமைக்க ப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க வருசாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் காளியம்மன் உள்பட பரிவார தெய்வங்கள் தலைமலை வீரப்பன், பேச்சியம்மன், கன்னி விநாயகர், கருப்பசாமி, மாரியம்மன், பார்வதி, சின்ன மாரியம்மன், சின்ன காளியம்மன் ஆகிய வற்றிற்கு விபூதி, குங்குமம், சந்தனம், பன்னீர், எலுமிச்சை, இளநீர் உள்பட 18 வகையான நறுமண பொ ருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    சந்தன காப்பு அலங்காரத்தில் பட்டு ஆடைகள், மலர் மாலை கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டி சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்ன தானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பவுர்ணமி பூஜை வழி பாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

    • இந்து சமய அறநிலையத்துறை குழுவினர் உண்டியல் சீலை அகற்றி பணத்தை எண்ணிக்கை செய்ய முயன்றனர்.
    • அடிப்படை வசதிகள் செய்து தந்த பின்னர்தான் கோவில் உண்டியலில் உள்ள பணத்தை எடுத்து செல்வோம் என உத்தரவாதம் அளித்திருந்தனர்.

    சிவகிரி:

    இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

    கோவில் உண்டியல்

    விடுமுறை நாட்களிலும், திருவிழா நாட்களிலும் தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் திரளாக வருகை தந்து கிடா வெட்டி, முடி காணிக்கை செலுத்தி, பொங்கலிட்டு வழிபட்டு வருகின்றனர். அதிகளவில் பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி, காணிக்கை செலுத்துவதால் இக்கோவில் உண்டியல் நிரம்பி விடுகிறது.

    இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கேசவராஜன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் முருகன், எழுத்தர் குமார் மற்றும் உண்டியல் பணத்தை எண்ணும் இந்து சமய அறநிலையத்துறை குழுவினர் ஆகியோர் காளியம்மன் கோவிலில் உள்ள உண்டியல் மீதுள்ள சீலை அகற்றி பணத்தை எண்ணிக்கை செய்ய முயன்றனர்.

    அடிப்படை வசதிகள்

    இது குறித்து தகவல் அறிந்த தேவிபட்டணம் ஊராட்சிமன்ற தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. கிளைச்செயலாளர் முருகன், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் முருகனிடம், கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான கழிவறை, சுகாதாரமான குடிநீர் மற்றும் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணிகள், கோவிலை சுற்றிலும் சுத்தமாக வைத்திருத்தல் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என ஏற்கனவே நாங்கள் கோரிக்கை வைத்திருந்தோம்.

    அப்போது அடுத்த முறை அடிப்படை வசதிகள் செய்து தந்த பின்னர்தான் கோவில் உண்டியலில் உள்ள பணத்தை எடுத்து செல்வோம் என உத்த ரவாதம் அளித்திருந்தனர். இந்நிலையில் பக்தர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்து தராமல், உண்டியல் பணத்தை எடுத்து செல்ல வந்துள்ளீர்கள்.

    எனவே உண்டியல் பணத்தை எண்ணக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் அகற்றிய உண்டியலின் மீது மீண்டும் சீல் வைத்தனர். இனிமேல் கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராமல் உண்டியல் பணத்தை எடுக்க வரமாட்டோம் என்று உறுதி அளித்தனர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாடசாமி, ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், ஊராட்சி மன்ற 12 வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • இன்று மாலை குண்டாற்றிலிருந்து குற்றால தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் காளியம்மன் கோவில் கொடை விழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. நேற்று கடையநல்லுார் கிருஷ்ணாபுரம் ஆரூத்ரா திருவாசக குழுவின் சார்பில் தேசிய இந்து கோவில் கூட்டமைபின் மாவட்டதலைவா் திருவாசகி சிவபிரேமா தலைமையில், தேசிய இந்து கோவில் கூட்டமைப்பின் தென்காசி மாவட்ட செயலாளா் ராம்நாத் முன்னிலையில் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. இன்று மாலை 6 மணிக்கு வில்லிசை, 6.30 மணிக்கு செங்கோட்டை குண்டாற்றிலிருந்து குற்றால தீர்த்தம் எடுத்து வருதல், தொடா்ந்து கும்மி பாட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் தலைவா் சுப்பையா, செயலாளா் சண்முகவேல், பொருளாளா் லெட்சுமணன், இளைஞர் சங்க நிர்வாகிகள் தலைவா் ஜெகநாதன், செயலாளா் சிவா, பொருளாளா் காளிராஜ் மற்றும் சேனைத்தலைவா் சமுதாய பெரியோர்கள், இளைஞர் சங்க நிர்வாகிகள் உறுப்பினா்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோவில் செயல் அலுவலரிடம் முறையிட்டனர்.
    • ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் மனுவை செயல் அலுவலர் ஜெகநாதனிடம் அளித்தார்.

    சிவகிரி:

    இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேவிபட்டணம் காளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு கட்சி பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கோவில் செயல் அலுவலர் ஜெகநாதனிடம் முறையிட்டனர்.

    இதனைத்தொடர்ந்து செயல் அலுவலர் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவோம் என்று உறுதி அளித்தார்.

    எழுத்துப்பூர்வமான கடிதம் கேட்டு ஊர்பொதுமக்களின் சார்பாக தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் மனுவை செயல் அலுவலர் ஜெகநாதனிடம் அளித்தார். இதனையடுத்து மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு கட்சி பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    ×